Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஹக்கீம், மனோ, திகா ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைகின்றனர்: ரிஷாத் இன்னும் தீர்மானம் இல்லை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 2, 2024 • 5:18 AM

ஹக்கீம், மனோ, திகா ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைகின்றனர்: ரிஷாத் இன்னும் தீர்மானம் இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமையில் உருவாக்கப்படவுள்ள உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சிகளுக்கிடையிலான உடன்படிக்கை ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளது.
  • கூட்டணிக்கு பின்னர் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியாக ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • சுகததாச மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
எழுத்து அளவு:

தலைமையில் உருவாக்கப்படவுள்ள உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சிகளுக்கிடையிலான உடன்படிக்கை ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளது.

சுகததாச மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க, பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க போன்ற பலர் தமது கட்சிகள் மற்றும் குழுக்களுக்காக இங்கு இணைந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டணிக்கு பின்னர் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியாக ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என  ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பிக்க - தயாசிறி - ரிஷாத் இன்னும் முடிவு எடுக்கவில்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அவர் அதனை மறுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் குடியரசுக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினதும் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்த சம்பிக்க, அடுத்த சில தினங்களில் தமது கட்சி கூடி உறுதியான தீர்மானத்தை எடுக்க நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹக்கீம், மனோ, திகா ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைகின்றனர்: ரிஷாத் இன்னும் தீர்மானம் இல்லை! | Tamil Leader | We Lead the Nation