Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சிஐடியின் முன்னாள் பணிப்பாளரை ஷானியை வாகன விபத்தில் கொல்ல சதி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 2, 2024 • 3:28 AM

சிஐடியின் முன்னாள் பணிப்பாளரை ஷானியை வாகன விபத்தில் கொல்ல சதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஷானி அபேசேகரவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது .
  • பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் , தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு ஷானி அபேசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
  • மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது .
எழுத்து அளவு:

முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொல்ல சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் நீதிமன்றில் 

உண்மைகளை விளக்குமாறு பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம்  அழைப்பாணை  அனுப்பியுள்ளது.

ஷானி அபேசேகரவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்வரும்  9ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு  அழைப்பாணை அனுப்பியுள்ளது .

மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட,  முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது .

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் , தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு ஷானி அபேசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது கட்சிக்காரரை வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், அவரது உயிருக்கு ஆபத்துள்ளது .

தனது சேவையாளருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி  பாதுகாப்பை அதிகரித்து அவரது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார் .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...