Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் பணிகளை மேற்கொள்ள லலித் பத்திநாயக்க நியமனம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2024 • 12:24 PM

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் பணிகளை மேற்கொள்ள லலித் பத்திநாயக்க நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மா அதிபர் லலித் பத்திநாயக்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் (நிர்வாகம்) பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த (18) இடம்பெற்ற பொலிஸ் ஆணைக்குழு அமர்வின்போது பொலிஸ் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
  • சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலாந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதையடுத்து, அந்த பதவியின் நிர்வாக கடமைகளை தற்காலிகமாக மேற்கொள்வதற்கு பொருத்தமான அதிகாரியை சிபாரிசு செய்து அறிவிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தது.
எழுத்து அளவு:

மா அதிபர் லலித் பத்திநாயக்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் (நிர்வாகம்) பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த (18) இடம்பெற்ற பொலிஸ் ஆணைக்குழு அமர்வின்போது பொலிஸ் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலாந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதையடுத்து, அந்த பதவியின் நிர்வாக கடமைகளை தற்காலிகமாக மேற்கொள்வதற்கு பொருத்தமான அதிகாரியை சிபாரிசு செய்து அறிவிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு  பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தது.
 
இதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம், பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின்றி பிரதி பொலிஸ் மா அதிபரை (நிர்வாகம்) நியமிக்கும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணிபுரியும் லலித் பதிநாயக்க, தற்போது பதவியில் இருக்கும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...