Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கோழைத்தனமான தாக்குதல்களினால் ஒருபோதும் பாலஸ்தீன விடுதலைப் பாதையை முடக்க முடியாது! - ரிஷாத்

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2024 • 11:50 AM

கோழைத்தனமான தாக்குதல்களினால் ஒருபோதும் பாலஸ்தீன விடுதலைப் பாதையை முடக்க முடியாது! - ரிஷாத்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மீட்பு போராட்டத்தில் நிலைத்துநின்ற பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைச் சம்பவமானது மிலேச்சனத்தின் வெறியர்களின் முகங்களை காட்டுகின்றத.
  • அதேபோல் சஹீதுடைய அந்தஸ்தை எல்லாம் வல்ல அல்லாஹூத்தாஆலா அவருக்கு வழங்க பிரார்த்தனை செய்கின்றேன்.
எழுத்து அளவு:

மீட்பு போராட்டத்தில் நிலைத்துநின்ற பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைச் சம்பவமானது மிலேச்சனத்தின் வெறியர்களின் முகங்களை காட்டுகின்றத. இப் படுகொலைகளை மனிதத்துவம் கொண்ட எவராலும் அங்கீகரிக்க முடியாது. 

ஆக்கிரமிப்பினை மட்டும் கொண்டு ஹமாஸ் மக்களையும்இ சிறுவர்களையும்இகர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் என பாராது கொடூரமான முறையில்கொன்றொழிக்கும் இஸ்ரேலின் இந்த செயலை நான் பிரதிநிதித்துவம் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது வண்மையாக கண்டிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை-பலஸ்தீன உறவு என்பது பல ஆண்டுகள் நெருக்கமானது இந்த உறவானது எம்மில் இருந்து பிரிக்க முடியாததொன்று என்பதால் தான் நாம் இழப்புக்களின் வேதனையை  உணர்கின்றோம். பாலஸ்தீனத்தின் போராட்டம் என்பது உலகலாவிய வல்லரசுகள் கூட நியாயம் கண்டுள்ள நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து கட்டுக்கடங்காத காட்டுமிராண்டித்தனமாக  மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அம்மக்களை மேலும் பல இழப்புக்களுக்குள் தள்ளிவருகின்றது.

அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களாக இந்த படுகொலை காணப்படுவதாகவும்  எல்லை மீறும்   இஸ்ரேலின் இந்தமோசமான மனித படுகொலையினை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டுவதுடன்இ இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்  மர்ஹூம் இஸ்மாயில் ஹனியாவின் மறைவுக்கு எமது  கட்சி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. அதேபோல் சஹீதுடைய அந்தஸ்தை எல்லாம் வல்ல அல்லாஹூத்தாஆலா அவருக்கு  வழங்க பிரார்த்தனை செய்கின்றேன்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோழைத்தனமான தாக்குதல்களினால் ஒருபோதும் பாலஸ்தீன விடுதலைப் பாதையை முடக்க முடியாது! - ரிஷாத் | Tamil Leader | We Lead the Nation