Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

'கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் முயற்சியில் ஞானசார தேரர்!'

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2024 • 11:32 AM

'கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் முயற்சியில் ஞானசார தேரர்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் முயற்சியில் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் திரைமறைவில் செயற்பட்டு வருவதாக தாம் சந்தேகிப்பதாக கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.
  • இன்றுவரை நாங்கள்தான் இந்த கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் மற்றும் நம்பிக்கையாளர் சபையினர் புதிய நிருவாக சபை பதவியேற்றலின் அடாத்தாக எம்மை அச்சுறுத்த வருகின்றார்கள்.
  • எமது நிர்வாகம் மீதான குற்றச்சாட்டுக்கள் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் என புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நியமனப்பத்திரத்தை 2024.07.24 அன்று முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்கு பகுதி) வழங்கி இருப்பதனை நாம் இதுவரை ஏற்கவில்லை.
எழுத்து அளவு:

பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் முயற்சியில் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் திரைமறைவில் செயற்பட்டு வருவதாக  தாம் சந்தேகிப்பதாக கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ். எம். ஏ அஸீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்  பெயரால் புதிய நிருவாக சபை சட்டவிரோதமாக செயற்பட முயற்சி செய்கினறது.

இன்றுவரை நாங்கள்தான் இந்த கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் மற்றும் நம்பிக்கையாளர் சபையினர் புதிய நிருவாக சபை பதவியேற்றலின் அடாத்தாக எம்மை அச்சுறுத்த வருகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளேன்.

எமது நிர்வாகம் மீதான குற்றச்சாட்டுக்கள் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் என  புதிதாக 22 பேர் கொண்ட   நம்பிக்கையாளர் நியமனப்பத்திரத்தை  2024.07.24 அன்று முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்கு பகுதி) வழங்கி இருப்பதனை நாம் இதுவரை ஏற்கவில்லை.

மக்களும் அவ்வாறான ஒரு கருத்தில் தான் உள்ளனர்.  இங்கு ஞானசார தேரர் மற்றும் இதர தரப்பினர் எமது நிர்வாகத்தை குழப்புவதற்கு முயல்கின்றனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இவ்வாறான குழப்ப நிலை ஏற்படுவது வீண் சந்தேகத்தை எம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...