Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலா, தம்மிக்கவா? தீர்மானம் தாமதமாகிறது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2024 • 8:05 AM

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலா, தம்மிக்கவா?  தீர்மானம் தாமதமாகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.
  • இதேவேளை, கட்சியின் அரசியல் பீட தீர்மானத்துக்கு மாறாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளது.
  • பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க கட்சியின் அரசியல் குழு கடந்த திங்கட்கிழமை தீர்மானித்தது.

இரண்டு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்திருந்தது.

இதனையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அடுத்தவாரம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் அரசியல் பீட தீர்மானத்துக்கு மாறாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவித்துள்ளார்.

"பொதுஜன பெரமுன இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா அல்லது தோற்க வேண்டுமா என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு வேட்பாளரை முன்வைக்க மிகவும் தவறான முடிவை எடுத்ததுள்ளது. இந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்கள் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...