Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஓட்டமாவடியில் ஆயுதங்களுடன் கைதான மெளலவி: சகோதரன் வீட்டிலும் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2024 • 3:55 AM

ஓட்டமாவடியில் ஆயுதங்களுடன் கைதான மெளலவி:  சகோதரன் வீட்டிலும் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகத்தில் மெளலவி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
  • இதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, மகசீன் மற்றும் 29 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
  • சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் அவரது சகோதரரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர், அங்கு மற்றொரு T56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 30 தோட்டாக்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
  • விசாரணையின்போது, ​​வாழைச்சேனை பதிரியா நகரில் வசிக்கும் 43 வயதுடைய சந்தேக நபர், தான் நாவலப்பிட்டி பிரதேசத்தில் மெளலவியாக கடமையாற்றுவதாக கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகத்தில் மெளலவி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி நாவலடி பகுதியில் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் தொடர்பில் அரலகங்கவில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு இராணுவத்தின் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, மகசீன் மற்றும் 29 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் அவரது சகோதரரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர், அங்கு மற்றொரு T56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 30 தோட்டாக்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையின்போது, ​​வாழைச்சேனை பதிரியா நகரில் வசிக்கும் 43 வயதுடைய சந்தேக நபர், தான் நாவலப்பிட்டி பிரதேசத்தில் மெளலவியாக கடமையாற்றுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததாகவும் துப்பாக்கி மீது தனக்கு உள்ள அதீத ஆர்வம் காரணமாக அவற்றை தன்னிடம் வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஓட்டமாவடியில் ஆயுதங்களுடன் கைதான மெளலவி: சகோதரன் வீட்டிலும் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு! | Tamil Leader | We Lead the Nation