Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனாதிபதிக்கு சுதந்திரக் கட்சி மத்திய குழு ஆதரவா? நிராகரிக்கும் தயாசிறி ஜயசேகர!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2024 • 2:51 AM

ஜனாதிபதிக்கு சுதந்திரக் கட்சி மத்திய குழு ஆதரவா? நிராகரிக்கும் தயாசிறி ஜயசேகர!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஆதரவு தெரிவிப்பதாக வெளியான அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
  • நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், மத்திய குழுவில் இது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த அறிக்கையை நான் திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்.
  • தயாசிறி ஜயசேகர எக்ஸ் தளத்தில் தெரிவிக்கையில், “ஸ்ரீ.ல.சு.கட்சியை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஆதரவு தெரிவிப்பதாக வெளியான அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர எக்ஸ் தளத்தில் தெரிவிக்கையில், “ஸ்ரீ.ல.சு.கட்சியை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளார்.
 
நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், மத்திய குழுவில்  இது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  என்பதால், இந்த அறிக்கையை நான் திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்.
 
“இந்த நபர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சட்டபூர்வ உரிமை இல்லை, எனவே, கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்ற வகையில், கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் இந்த முயற்சிகளையும் நான் கண்டிக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...