Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்போம்! -சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவிப்பு

T

The Leader Desk

ஜூலை 31, 2024 • 4:31 PM

ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்போம்! -சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான கூட்டணியின் மூலமே நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும் என்று தெரிவித்தார்.
  • நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்போது, அரசியல் கட்சிகளின் நோக்கங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே தனது நிலைப்பாடாகும் என்றும், தற்போது எட்டப்படும் இந்த உடன்பாடுகள் வாயிலாக எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கான தேசிய வரைவொன்றைத் தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான கூட்டணியின் மூலமே நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும் என்று தெரிவித்தார்.

மற்றையவர்கள் சம்பிரதாய அரசியலை பின்பற்றும்போது, அனைவரையும் ஒன்றிணைத்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதே தனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டீ.எஸ்.சேனநாயக்க - பண்டாரநாயக்க ஆகியோர் 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய பின்னர் இவ்வாறானதொரு கூட்டிணைவு அமைவது இதுவே முதல் தடவையாகும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்போது, அரசியல் கட்சிகளின் நோக்கங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே தனது நிலைப்பாடாகும் என்றும், தற்போது எட்டப்படும் இந்த உடன்பாடுகள் வாயிலாக எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கான தேசிய வரைவொன்றைத் தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...