நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் பரவியுள்ள செய்தி தொடர்பில் தமிழ் லீடர் இணையம் ரிஷாத் பதியுதீனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அவ்வாறு நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவில்லை. இது ஒரு சிலரால் இட்டுக் கட்டப்பட்டு பரப்பப்படும் பொய்யான செய்தியாகும்.
யுஎஸ்எட் ( USAID) நிறுவனம் கலந்துரையாடல் ஒன்றை பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மூன்று தினங்களாக நடத்தியது. அதன் இறுதிநாள் நிகழ்வு இன்றாகும் (31)
வர்த்தகம் மற்றும் நிவாரணங்கள், நிதிநிலைமைகளைக் கையாளுதல் தொடர்பிலான இந்த மகாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
எமது இந்தக் கலந்துரையாடல் குறித்த ஹோட்டலின் 2 ஆவது தளத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில், அதே ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் சந்திக்கவில்லை.
என்மீதும் எமது கட்சி மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களே இவ்வாறு வதந்தியைப் பரப்பியுள்ளனர்.“ என்றார்.
ஜனாதிபதி ரணில் - ரிஷாத் பதியுதீன் சந்திப்பு விவகாரம்!
T
The Leader Desk
ஜூலை 31, 2024 • 4:17 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் பரவியுள்ள செய்தி தொடர்பில் தமிழ் லீடர் இணையம் ரிஷாத் பதியுதீனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். எமது இந்தக் கலந்துரையாடல் குறித்த ஹோட்டலின் 2 ஆவது தளத்தில் இடம்பெற்றது.
- “அவ்வாறு நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவில்லை.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

