வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை தவிர வேறு எவராகினும் கட்சியை விட்டு வெளியேறினாலும் அவர்களால் வாக்குகளை பெற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (31) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்றும், அந்தக் குழுவில் சிலர் இன்னமும் எம்முடன் செயற்பட்டு வருவதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களே மஹிந்த ராஜபக்க்ஷவின் படத்தை வைத்து நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள் எனத் தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கிராமத்துக்குச் சென்று உள்ளூராட்சி மன்ற வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொன்னவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குத் தளம் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் இருப்பதால், மக்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றும், வெளியேறுபவர்கள் 200, 500 அல்லது 1000 வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
எவர் வெளியேறினாலும் எமது வாக்குத்தளம் குறைவடையப் போவதில்லை! - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
T
The Leader Desk
ஜூலை 31, 2024 • 11:39 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை தவிர வேறு எவராகினும் கட்சியை விட்டு வெளியேறினாலும் அவர்களால் வாக்குகளை பெற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (31) தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்றும், அந்தக் குழுவில் சிலர் இன்னமும் எம்முடன் செயற்பட்டு வருவதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

