Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணிலை ஆதரியுங்கள்: கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அழுத்தம்: உயர்பீடக் கூட்டமும் தாமதம்!

T

The Leader Desk

ஜூலை 31, 2024 • 8:30 AM

ரணிலை ஆதரியுங்கள்: கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அழுத்தம்: உயர்பீடக் கூட்டமும் தாமதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்களாக நாட்டில் நிலவும் அரசியல் மாற்றங்களைக் கட்சி அவதாளித்து வருவதாகவும் இதன் காரணமாக தமது கட்சி யாரை ஆதரிப்பது என்பது குறித்து உத்தியோகபூர்வ முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
  • இருப்பினும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எமது கட்சியினர் முன்வைத்துள்ள ரணிலை ஆதரிக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் அதிக கரிசனை கொண்டுள்ளதால் எமது கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்திவைக்க வேண்டியுள்ளது.
  • இது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் சில நாட்களாக அரசியல் கட்சிகளிடையே பல்வேறு நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
எழுத்து அளவு:

நாட்களாக நாட்டில் நிலவும் அரசியல் மாற்றங்களைக் கட்சி அவதாளித்து வருவதாகவும் இதன் காரணமாக தமது கட்சி யாரை ஆதரிப்பது என்பது குறித்து உத்தியோகபூர்வ முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் சில நாட்களாக அரசியல் கட்சிகளிடையே பல்வேறு நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான நிலைமையை எமது கட்சி நிதானமாக அவதானித்து வருகிறது. பொதுஜன பெரமுனவின் அதிக எண்ணிக்கையான எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிழக்கிலங்கையைச் சேர்ந்த எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர் .

இவ்வாறானதொரு நிலைமையில் எமது கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாதமடைகிறது.

எமது அரசியல் பீடக் கூட்டத்தை இரண்டொரு தினங்களில் நடத்தி யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கவிருந்தோம்.

இருப்பினும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எமது கட்சியினர் முன்வைத்துள்ள ரணிலை ஆதரிக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் அதிக கரிசனை கொண்டுள்ளதால் எமது கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்திவைக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கன் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகவுள்ள தேர்தல் கூட்டணி தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.


எமது கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள பல கோரிக்கைகளுக்கு சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்து கைச்சாத்திட வேண்டும். அதன் பின்னரே இது தொடர்பில் ஆராய்வோம்.


ரணில் - சஜித் என்பது எமக்கு பிரச்சினை இல்லை ஆனால் எமது முஸ்லிம் சமூகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளுக்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

இது இதுதவிர, எவரையும் எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிக்க நாம் தயாரில்லை. ஆனால் இரு தரப்பினரும் எம்முடன் பேசுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணிலை ஆதரியுங்கள்: கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அழுத்தம்: உயர்பீடக் கூட்டமும் தாமதம்! | Tamil Leader | We Lead the Nation