Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மொனராகலை வைத்தியசாலை கூரை வீழ்ந்ததால் சிறுவர்கள், தாய்மார்கள் வெளியேற்றம்!

T

The Leader Desk

ஜூலை 30, 2024 • 10:40 AM

மொனராகலை வைத்தியசாலை கூரை வீழ்ந்ததால் சிறுவர்கள், தாய்மார்கள் வெளியேற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • இன்று (30) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று குழந்தைகள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  • புதிய அடுக்குமாடி கட்டிடத்துக்கு இயந்திரம் மூலம் கொங்கிரீட் இட முயற்சித்தபோது ​​கட்டுமான கட்டிடத்தை ஒட்டியுள்ள சிறுவர் பிரிவுக் கட்டடத்தின் மேற்கூரையில் கலவையான கொங்கிரீட் அடுக்குகள் வீழ்ந்து மேற்கூரை உடைந்தது.
எழுத்து அளவு:

வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புதிய அடுக்குமாடி கட்டிடத்துக்கு இயந்திரம் மூலம் கொங்கிரீட் இட முயற்சித்தபோது  ​​கட்டுமான கட்டிடத்தை ஒட்டியுள்ள சிறுவர் பிரிவுக் கட்டடத்தின் மேற்கூரையில் கலவையான கொங்கிரீட் அடுக்குகள் வீழ்ந்து மேற்கூரை உடைந்தது.
 
அப்போது அங்கிருந்த  பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மீது உடைந்த கொங்கிரீட்  துண்டுகள் வீழ்ந்துள்ளன.
 
இன்று (30) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று குழந்தைகள் மருத்துவ  சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
விபத்து காரணமாக குறித்த பிரிவில் உள்ள அனைத்துக் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தற்போது வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளரிடம் கேட்டபோது, ​​எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்தார். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...