Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடும் அமளி, துமளி!

T

The Leader Desk

ஜூலை 30, 2024 • 6:59 AM

மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடும் அமளி, துமளி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மொட்டுச் சின்னத்தில் தனி வேட்பாளரை முன்வைப்பதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று (29) தீர்மானித்திருந்தது.
  • ஆனால், இந்தக் கூட்டத்தில் 79 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது.
எழுத்து அளவு:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மொட்டுச் சின்னத்தில் தனி வேட்பாளரை முன்வைப்பதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று (29) தீர்மானித்திருந்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது.
 
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 உறுப்பினர்கள் உள்ளனர்.
 
ஆனால்,  இந்தக் கூட்டத்தில் 79 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
 
அடுத்த சில நாட்களில் அக்கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இங்கு இடம்பெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர்  கடும் அமளி ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
 
மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உடுகொட, கோகில ஹர்ஷனி குணவர்தன, சஹான் பிரதீப், ரமேஷ் பத்திரன காஞ்சன விஜேசேகர பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்கும் யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.
 
இது தொடர்பில் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், வெற்றி பெறக் கூடிய பொருத்தமான வேட்பாளர் முன்வைக்கப்படுவார் என்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...