துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் 14 வயது சிறுமி ஒருவர் இது தொடர்பில் குளியாப்பிட்டிய கந்தனகெதர பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யச் சென்றிருந்த போது அங்கு வைத்து அந்தச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி பொலிஸ் நிலையம் சென்றபோது அங்கும்....
T
The Leader Desk
ஜூலை 30, 2024 • 2:58 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் 14 வயது சிறுமி ஒருவர் இது தொடர்பில் குளியாப்பிட்டிய கந்தனகெதர பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யச் சென்றிருந்த போது அங்கு வைத்து அந்தச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- சிறுமியைக் கடத்தி துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு செய்ய கடந்த 27ஆம் திகதி தனது தாயுடன் கந்தனகெதர பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
- அப்போது சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறுமியை வேறு ஒரு பிரிவுக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை சில்மிஷம் செய்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
சிறுமியைக் கடத்தி துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு செய்ய கடந்த 27ஆம் திகதி தனது தாயுடன் கந்தனகெதர பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறுமியை வேறு ஒரு பிரிவுக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை சில்மிஷம் செய்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற உடனேயே சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அங்கு சென்று சந்தேக நபரான சப்-இன்ஸ்பெக்டரைக் கைது செய்ததுடன் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

