Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஆட்சியாளர்களின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன்! -சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஜூலை 29, 2024 • 1:52 PM

ஆட்சியாளர்களின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன்! -சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் படித்தவர்களை உருவாக்கி, கல்வியை பலப்படுத்தி, கற்றறிந்தோர் தலைமுறையை உருவாக்க வழிகோருகிறது.
  • இல்லையோல் இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன்.
  • பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 383 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன களுத்துறை, பாணந்துறை, ஜீலான் மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி இடம்பெற்றது.
எழுத்து அளவு:

நாட்டில் படித்தவர்களை உருவாக்கி, கல்வியை பலப்படுத்தி, கற்றறிந்தோர் தலைமுறையை உருவாக்க வழிகோருகிறது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எட்டும் மனப்பாங்கு மாற்றம் இதனால் விருத்தியடையும். நாட்டில் கல்வியறிவு பெற்ற சமூகம் உருவாக வேண்டும். கற்றறியாதோர்  சமூகத்தில் கற்றறியா ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அறிவை அடிப்படையாகக் கொண்டமையாத தீர்மானங்களை எடுப்பர். இத்தகையவர் எடுத்த முட்டாள்தனமான தீர்மானங்களை மக்கள் இன்று அனுபவித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் இலக்கு வைத்து, நாட்டின் ஆட்சியாளர்கள் எடுக்கும் கீழ்த்தரமான முடிவுகளால் குறிப்பிட்டதொரு சமூகத்தினர் பாதிக்கப்பட்டனர். அண்மையில் இதற்கு ஆட்சியாளர்கள் மன்னிப்பும் கேட்டனர். நல்ல விடயம் தான். ஆனால் ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் குறிவைத்து எடுக்கப்பட்ட அர்த்தமற்ற முடிவுகளால்  பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு, வலுக்கட்டாயமாக தகனம் செய்த கீழ்த்தரமான செயலுக்கான இழப்பீட்டை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லையோல் இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன். முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் சமூகம் இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும் குடிமக்களை உருவாக்காது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறேன். இஸ்ரேலும் பாலஸ்தீனும் நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இழிவான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மனித நேயத்திற்கு முதலிடம் வழங்க வேண்டும். அதன் மூலம் உலக சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 383 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன

களுத்துறை, பாணந்துறை, ஜீலான் மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி இடம்பெற்றது. இந்ழிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆட்சியாளர்களின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன்! -சஜித் பிரேமதாச | Tamil Leader | We Lead the Nation