Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் கடமையேற்பில் சுமூக நிலையை ஏற்படுத்த பொலிஸார் வரவழைப்பு!

T

The Leader Desk

ஜூலை 29, 2024 • 9:32 AM

பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் கடமையேற்பில் சுமூக நிலையை ஏற்படுத்த பொலிஸார் வரவழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்றலின்போது ஏற்பட்ட இழுபறி காரணமாக கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
  • இதன் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் சபை நியமனத்தை 2024.07.24 அன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்பு பகுதி) வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
  • அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல்களில் கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல்களின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எழுத்து அளவு:
பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்றலின்போது ஏற்பட்ட இழுபறி காரணமாக கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
 
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல்களில் கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல்களின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டன.
 
இதன் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும்  புதிதாக 22 பேர் கொண்ட   நம்பிக்கையாளர் சபை நியமனத்தை  2024.07.24 அன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்பு பகுதி) வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
 
IMG 20240728 202429 800 x 533 pixel
 
இதற்கமைய புதிய நம்பிக்கையாளர் சபை  தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் பொருட்டு ஊடக சந்திப்பின் ஊடாக பொதுமக்களுக்கு  அறிவித்ததுடன் குறித்த பள்ளிவாசலுக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து தொழுகை மேற்கொண்டு புதிய நம்பிக்கையாளர் நியமனம் தொடர்பில் தெளிவாக விளக்கங்களை வழங்கினர்.
 
IMG 20240728 202357 800 x 533 pixel
 
அத்துடன்  பள்ளிவால் அலுவலகத்துக்கு சென்று புதிய நம்பிக்கையாளர் சபை நிர்வாகம் தமது கடமைகளை ஆரம்பித்தபோது முன்னாள் நம்பிக்கையாளர் சபை நிர்வாகத் தலைவர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக பள்ளிவாசல் கடமைகளை சிறு குழு ஒன்று வருகை தந்து குழப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கல்முனை தலைமையக பொலிஸார் புதிய நம்பிக்கையாளர் சபையினர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் இதர தரப்பினருடன் தொடர்பக மேற்கொண்டு சமரசம் செய்ததால் ஏற்படவிருந்த பதற்ற நிலைமை சுமூகமடைந்தது.
 
மேலும் குறித்த மேற்குறித்த இரு பள்ளிவாசல்களுக்குமான புதிய நம்பிக்கையாளர் சபையினரின் ஆட்சிக்காலம்  3 வருடங்கள் என்பதுடன் 22.05.2024 முதல் 21.05.2027 வரை இருக்கும் என முஸ்லீம் பள்ளிவாசல்கள் மற்றும் தரும நம்பிக்கை சொத்துப் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.ரிப்ழான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...