Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஆடு பயிரை மேயவில்லை, வேலியே பயிரை மேய்ந்தது: அக்கரைப்பற்று பொலிஸில் சம்பவம்!

T

The Leader Desk

ஜூலை 28, 2024 • 12:38 PM

ஆடு பயிரை மேயவில்லை, வேலியே பயிரை மேய்ந்தது: அக்கரைப்பற்று பொலிஸில் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
  • இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிசார் கைது செய்திருந்தனர்.
  • குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட் டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிஸார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தியது.
எழுத்து அளவு:

பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பம் தொடர்பில் 4  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு அட்டாளைச்சேனை  பகுதி வீடு ஒன்றில்  அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில்  உள்ள ஒரு  வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிசார்  கைது செய்திருந்தனர்.

பின்னர் குறித்த சந்தேக நபர்  அக்கரைப்பற்று நீதிமன்றில்  ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். அவரது சார்பில் தோன்றிய சட்டத்தரணி தனது குறித்த ஆட்டை தனது வீட்டு நிகழ்வு ஒன்றுக்கு அறுத்ததாகவும்  குற்றத்தை ஏற்றுக் கொள்வதாகத்  தெரிவித்துள்ளார்.

இதனைநடுத்து குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு   குறித்த சான்றுப் பொருளை பார்வையிட  நீதிவான்   சென்றபோது  ஆட்டிறைச்சியை மூடையில் கட்டி  பெக்கோ இயந்திரம் மூலம் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்

IMG 20240728 174627 800 x 533 pixel

டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிஸார்  திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தியது.

இதனையடுத்து நீதிவான் பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூடையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார்.  அதன்போது  குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் காணப்படவில்லை.

இது தொடர்பில் வினவியபோது ஆட்டிறைச்சியை சில பொலிஸார் எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து  அக்கரைப்பற்று நீதிமன்ற  நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று   விசாரணை நடத்துமாறு  உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனடிப்படையில் ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு எதிராக  அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை மேற்கொண்டு அதனடிப்படையில்  குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.

இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள  இறக்காமம் பொலிஸ் நிலையத்துக்கும்  ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிந்தவூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...