Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஊடலின் பின்னர் ரணில்- பசில் மீண்டும் கூடல்!

T

The Leader Desk

ஜூலை 28, 2024 • 5:35 AM

ஊடலின் பின்னர் ரணில்- பசில் மீண்டும் கூடல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதற்காக கட்டுப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
  • எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தரப்புக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
  • எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் யார், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்சி ரீதியாக ஆதரிப்பார்களா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமையும் விசேட அம்சமாகும்.
எழுத்து அளவு:

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இன்று (28) முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வேட்புமனுத்தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சில நாட்களுக்கு முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

இதன்போது ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாலும் இணக்கப்பாடு இன்றி பேச்சுவார்த்தை முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதற்காக கட்டுப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தரப்புக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் யார், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்சி ரீதியாக ஆதரிப்பார்களா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமையும் விசேட அம்சமாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஊடலின் பின்னர் ரணில்- பசில் மீண்டும் கூடல்! | Tamil Leader | We Lead the Nation