Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கஞ்சாவைக் காருக்குள் வைத்து இளைஞர்களைக் கைது செய்ய முயன்ற கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்!

T

The Leader Desk

ஜூலை 27, 2024 • 2:04 PM

கஞ்சாவைக் காருக்குள் வைத்து இளைஞர்களைக் கைது செய்ய முயன்ற கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சோதனையின்போது கஞ்சா பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவைக் கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், காரில் கஞ்சா போதைப்பொருளை வைத்து சோதனையிடப்பட்டு அந்த காரில் வந்தவர்களைக் கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
  • கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கு அமைய, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சோதனையின்போது கஞ்சா பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவைக் கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கு அமைய, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பதுடன் அவரும் மற்றுமொரு பொலிஸ் குழுவும் ஆனந்த குமார சுவாமி மாவத்தைக்கும் கேர்ணல் டி.ஜெயா மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், காரில் கஞ்சா போதைப்பொருளை வைத்து சோதனையிடப்பட்டு அந்த காரில் வந்தவர்களைக் கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ ஆடைகளை அணிந்து வெற்றிலை பாக்கு உண்டமை, சாரதி அல்லது வாகனத்தில் பயணிக்காத வேறு நபர் மற்றும் உதவி உத்தியோகத்தர் இல்லாமல் வாகனத்தை சோதனை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...