Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

வவுனியாவில் பெற்றோல் குண்டு வீசி தம்பதி கொலை: சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுப்பு!

T

The Leader Desk

ஜூலை 27, 2024 • 10:54 AM

வவுனியாவில் பெற்றோல் குண்டு வீசி தம்பதி கொலை: சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தம்பதியரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒரு வருடமாக சிறையில் உள்ள சந்தேக நபர்கள் 7 பேருக்கும் பிணை வழங்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் நிராகரித்தார்.
  • கடந்த 23-07-2023 அன்று சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பிறந்தநாள் விழா இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய தம்பதியினரை படுகொலை செய்தமை தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இதற்குப் பழிவாங்கும் வகையிலே இவர்கள் கொல்லப்பட்டனர்.
  • இந்தச் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 7 பேரும் ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 9 தடவைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதும் அவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை.
எழுத்து அளவு:

பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தம்பதியரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒரு வருடமாக சிறையில் உள்ள சந்தேக நபர்கள் 7 பேருக்கும் பிணை வழங்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.  இளஞ்செழியன் நிராகரித்தார்.

கடந்த 23-07-2023 அன்று சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பிறந்தநாள் விழா இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய தம்பதியினரை படுகொலை செய்தமை தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தம்பதியரின் பெண் அதற்கு முன் கிராம அதிகாரி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த திருமண்த்தை முறித்துக்  கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்ததால் தம்பதி கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவ ந்துள்ளது.

இதற்குப் பழிவாங்கும் வகையிலே இவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 7 பேரும் ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 9 தடவைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதும் அவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை.

அதனைக் குறிப்பிட்டு, சந்தேகநபர்கள் சார்பில் வவுனியா மேல் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிணை வழங்குவதற்கு எதிராக அரச தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் தனுஷன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் வாதிட்டதால், வவுனியா சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீட்டித்து உத்தரவிட்டார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...