Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணிலின் யோசனைகளை நிராகரித்த பசில் ராஜபக்‌ஷ!

T

The Leader Desk

ஜூலை 27, 2024 • 5:37 AM

ரணிலின் யோசனைகளை நிராகரித்த பசில் ராஜபக்‌ஷ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) நடைபெறவுள்ளது.
  • கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் தெரிக்கப்படுகிறது.
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 30 சத வீத ஒதுக்கீடும் மாகாண சபைகளுக்கு 35 சத வீத ஒதுக்கீடும் வழங்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
  • பாராளுமன்றத்துக்கு 40 சத வீத ஒதுக்கீடு வழங்கப்படும் என பசில் ராஜபக்க்ஷவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எழுத்து அளவு:

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பு இது.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் தெரிக்கப்படுகிறது.

இதன்போது ஜனாதிபதி வேட்புமனு மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கூட்டணி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 30 சத வீத ஒதுக்கீடும் மாகாண சபைகளுக்கு 35  சத வீத ஒதுக்கீடும் வழங்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்துக்கு 40  சத வீத ஒதுக்கீடு வழங்கப்படும் என பசில் ராஜபக்க்ஷவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த யோசனையைமுன்னாள் நிதியமைச்சர் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றங்களுக்கு 90  சதவீத ஒதுக்கீட்டையும்மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்துக்கு 70  சத வீத ஒதுக்கீட்டையும் பசில் ராஜபக்க்ஷ கோரியுள்ளதாக தெரியவருகிறது.

அதன் காரணமாகவே அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீர்வின்றி முடிவடைந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...