Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

குதிரையிலிருந்து மயிலுக்குத் தாவினார் சாய்ந்தமருது சலீம்!

T

The Leader Desk

ஜூலை 26, 2024 • 5:07 PM

குதிரையிலிருந்து மயிலுக்குத் தாவினார் சாய்ந்தமருது சலீம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (26) கல்முனையில் இடம்பெற்றது.
  • அதனைத் தொடர்ந்து நாளை (27) புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள "புத்தளம் எழுச்சி மாநாட்டில்" வைத்து கட்சியோடு உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இதன்போது கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்த சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.
எழுத்து அளவு:

கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (26) கல்முனையில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்த சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொள்வதற்கான முனைப்புடன் அம்பாரை மாவட்ட செயற்குழுவுடன் சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நாளை (27) புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள "புத்தளம் எழுச்சி மாநாட்டில்" வைத்து கட்சியோடு உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு தலைவரும் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளருமான அப்துல் றஸாக் (ஜவாத்), கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான அன்சில், கட்சியின் வெளிநாட்டு விவகரங்களுக்கான பணிப்பாளர் மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...