Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

வடமேல் மாகாணசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிப்பு! ஆளுனர் உத்தரவு

T

The Leader Desk

ஜூலை 24, 2024 • 3:08 PM

வடமேல் மாகாணசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்  சம்பளம்  அதிகரிப்பு! ஆளுனர் உத்தரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதனடிப்படையில் பாதுகாப்பு ஊழியர்களின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து தீர்த்துவைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
  • வடமேல் மாகாண சபை பாதுகாப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டு சுமார் பதினேழு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் , வருடாந்த மற்றும் வரவுசெலவுத்திட்டங்கள் ஊடான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக இவ்வாறான சம்பள அதிகரிப்பொன்று வழங்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

மனித வள அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்செயற்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு  உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (24) நடைபெற்றது

வடமேல் மாகாண ஆளுனர்  நஸீர்  தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் , தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 
 
பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைக்  கேட்டறிந்த ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள்,  தங்கள் வாழ்க்கைச்செலவுக்கான வருமானத்தை தேடிக் கொள்வதற்காகவே அனைவரும் தொழில்களில் ஈடுபடும் நிலையில், குறைந்த சம்பளத்தில்  நீண்ட காலமாக மாகாண சபையின் கீழ் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஏனைய சகல பிரச்சினைகள் குறித்தும் தான் தீவிர கரிசனை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
IMG 20240724 203121 800 x 533 pixel
 
அதனடிப்படையில் பாதுகாப்பு ஊழியர்களின் பிரச்சினைகளை  ஒவ்வொன்றாக ஆராய்ந்து தீர்த்துவைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
 
வடமேல் மாகாண சபை பாதுகாப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டு சுமார் பதினேழு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் , வருடாந்த மற்றும் வரவுசெலவுத்திட்டங்கள் ஊடான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக இவ்வாறான சம்பள அதிகரிப்பொன்று வழங்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...