Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இன்றைய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் ஆராய்வு!

T

The Leader Desk

ஜூலை 24, 2024 • 1:16 PM

இன்றைய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் ஆராய்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அமைச்சர்கள் ஆராய்ந்து இதற்கான பதிலை அறிவிப்பது என இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
  • உண்மைகளை ஆழமாக ஆராய்ந்த பின்னர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள சட்ட சிக்கல்களுக்கு அமைச்சரவையின் பதிலை எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
எழுத்து அளவு:

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அமைச்சர்கள் ஆராய்ந்து

இதற்கான பதிலை அறிவிப்பது என இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அந்தத் தீர்மானத்தில் பல சட்டச் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உண்மைகளை ஆழமாக ஆராய்ந்த பின்னர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள சட்ட சிக்கல்களுக்கு அமைச்சரவையின் பதிலை எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அமைச்சரவைக்கு கிடைத்துள்ளதால், அது தொடர்பான சட்டச் சிக்கல்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் இரண்டு தினங்களில் அமைச்சரவையின் பதிலை அறிவிப்பதே சிறந்தது என்பது அமைச்சரவையின் ஏகோபித்த தீர்மானம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்றைய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் ஆராய்வு! | Tamil Leader | We Lead the Nation