Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தம்மிக்க பெரேரா, அந்தப் பெரேரா, இந்தப் பெரேரா அனைவரும் எம்முடனேயே! - மஹிந்த

T

The Leader Desk

ஜூலை 24, 2024 • 11:48 AM

தம்மிக்க பெரேரா, அந்தப் பெரேரா, இந்தப் பெரேரா அனைவரும் எம்முடனேயே! - மஹிந்த

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாம் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்ய முயற்சிக்க மாட்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
  • நேற்று (23) பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
  • சூட் தைக்கக் கொடுத்தவர்கள் அணியச் சென்றபோது பல கட்சிகள் அழிந்தன.
எழுத்து அளவு:

தாம் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்ய முயற்சிக்க மாட்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (23) பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் வேட்புமனு தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், கட்சியின் கொள்கைகளை காப்பாற்றும் ஒருவரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தனிநபர்களை அடிப்படையாக வைத்து அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை. கொள்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம். நான் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே சூட்டை தைப்பது என் கடமை. பின்னர் யார் வேண்டுமானாலும் அணியலாம். சூட் தைக்கக் கொடுத்தவர்கள் அணியச் சென்றபோது பல கட்சிகள் அழிந்தன.
 
தமது கட்சியில் பல கருத்துக்கள் இருந்தாலும் கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலம் கருதி உரிய தீர்மானத்தை எடுப்பேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதன்போது, ​​ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமது கட்சி வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை முன்வைப்பதாகவும் மொட்டின் வெற்றி மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தம்மிக்க பெரேரா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வேட்புமனுத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​“ஒவ்வொருவரின் பெயர்களும் உள்ளன. தம்மிக்க பெரேரா, அந்த பெரேரா, இந்த பெரேரா, அவர்கள் அனைவரும் இருக்கிறார்கள். தாம் மனதில் கொண்டுள்ள வேட்பாளரை தற்போதைக்கு வெளியிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
 
அத்துடன், தனது மகன் நாமல் ராஜபக்க்ஷவின் வேட்புமனுத் தொடர்பில் வினவியபோது, ​​அது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம்தான் கேட்க வேண்டும் என்றார். நாமல் ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...