Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை சபாநாயகர் திரிபுபடுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்! - சஜித்

T

The Leader Desk

ஜூலை 24, 2024 • 9:13 AM

அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை சபாநாயகர் திரிபுபடுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்! - சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிறைவுபெறும் வரை தற்போதைய பொலிஸ் மா அதிபர் அந்தப் பதவியில் கடமையாற்றுவதை இடைநிறுத்துவதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • இந்த கடிதம் அரசியலமைப்பை தெளிவாக மீறியுள்ளது.
  • பிரதமரும் அங்கம் வகிக்கின்ற அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை திரிபுபடுத்தி சபாநாயகர் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எழுத்து அளவு:

நிறைவுபெறும் வரை தற்போதைய பொலிஸ் மா அதிபர் அந்தப் பதவியில் கடமையாற்றுவதை இடைநிறுத்துவதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமரும் அங்கம் வகிக்கின்ற அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை திரிபுபடுத்தி சபாநாயகர் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தின் பின்னர், அதன் முடிவை பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜனாதிபதிக்கு இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் அரசியலமைப்பை தெளிவாக மீறியுள்ளது. பிழையான, பொய்யான, வஞ்சிக்கும் இந்த  கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி நியமனங்களை வழங்கியதும்  அரசியலமைப்புக்கு முரணானது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகரின் அடிப்படையற்ற இவ்வாறான கடிதங்களை மூலமாகக் கொண்டு ஜனாதிபதி இவ்வாறான நியமனங்களை மேற்கொள்வது பொருத்தமான நடவடிக்கையா?  இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?  அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...