Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த படுகொலை; இருவர் கைது!

T

The Leader Desk

ஜூலை 24, 2024 • 3:59 AM

கிளப் வசந்த படுகொலை; இருவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உட்பட இருவரைக் கொன்று நால்வரைக் காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய இரு சந்தேக நபர்களை மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
  • கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரிய மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள பச்சை குத்தும் மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
  • இதன்படி, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று (23) இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • வெலிஹிந்த பிரதேசத்தில் இருந்து தெற்கு அதிவேக வீதி ஊடாக திக்வெல்ல பகுதிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் காரின் சாரதியையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு செல்ல கதிர்காமம் பகுதியில் பஸ்ஸை மறைத்து வைத்தவர் மற்றைய சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

உட்பட இருவரைக் கொன்று நால்வரைக் காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய இரு சந்தேக நபர்களை மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரிய மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள பச்சை குத்தும் மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
 
இதன்படி, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று (23) இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்தக் குற்றச் செயலுக்கு உறுதுணையாக இருந்த  குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் காரின் சாரதியையும் கொரத்தோட்டை பிரதேசத்தில் இருந்து வெலிஹிந்த பிரதேசத்துக்கு சந்தேக நபர்களில் ஒருவர் வேனில் ஏற்றிச் சென்று பஸ்ஸில் ஏற்றிச் சென்று பின்னர் வேனை புளத்சிங்கள பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வெலிஹிந்த பிரதேசத்தில் இருந்து தெற்கு அதிவேக வீதி ஊடாக திக்வெல்ல பகுதிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் காரின் சாரதியையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு செல்ல கதிர்காமம் பகுதியில் பஸ்ஸை மறைத்து வைத்தவர் மற்றைய சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த காலப்பகுதியில் சந்தேகநபர் வட்ஸ்அப் ஊடாக வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அது தொடர்பான கையடக்கத் தொலைபேசி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 36 வயதுடைய வெலிபன்ன மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
 
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிளப் வசந்த படுகொலை; இருவர் கைது! | Tamil Leader | We Lead the Nation