Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக்குள் முரண்பாடு!

T

The Leader Desk

ஜூலை 24, 2024 • 3:25 AM

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக்குள் முரண்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இந்தப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் கட்சியிலிருந்து ஒருவரை வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என மற்றைய தரப்பினரும் கடுமையாக வலியுறுத்தியதால் இந்தக் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் கட்சியிலிருந்து ஒருவரை  வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என மற்றைய தரப்பினரும் கடுமையாக வலியுறுத்தியதால் இந்தக் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்வைக்க வேண்டும் என கம்பஹா மாவட்ட கட்சிப் பிரதிநிதிகள் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
 
இந்தப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
 
இது தொடர்பில் கொழும்பு நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள சுதந்திரமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
 
எந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு பக்கபலமாக நிற்போம் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...