தலைமையிலான ' ஐக்கிய மக்கள் முன்னணி' என்ற அமைப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தமிழ் - முஸ்லிம் எம்பிக்கள் இணையப் போகும் ' ஐக்கிய மக்கள் முன்னணி' உதயமாகிறது!
T
The Leader Desk
ஜூலை 23, 2024 • 12:26 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தல் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- தேர்தல் சட்டத்தின்படி அடுத்த மாதம் வேட்புமனுக்கள் ஏற்கப்பட வேண்டும்.
- ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் இறுதியில் நடத்தப்பட வேண்டும்.
எழுத்து அளவு:
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் மத்துமபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தல் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தின்படி அடுத்த மாதம் வேட்புமனுக்கள் ஏற்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் இறுதியில் நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் பாராளுமன்றத்தில் அதிக பிரதிநிதிகளைக் கொண்ட கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளது.
சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என அனைத்துக் குழுக்களும் இணைந்தே ஐக்கிய மக்கள் முன்னணியை உருவாக்குகின்றன.
இதன்படி ஆகஸ்ட் 8 ஆம் திகதி இந்த முன்னணி உருவாகிறது.
ஒன்றிணைந்த மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பும் கூட்டணிக்காக ஊழலற்ற அனுபவமிக்க தலைவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அடங்கிய பெரும் குழு ஒன்றும் இணையப் போகிறது என்றார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

