Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மருதமுனையில் கைதான இருவருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு!

T

The Leader Desk

ஜூலை 23, 2024 • 7:31 AM

மருதமுனையில் கைதான இருவருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலமாக ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை 5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
  • அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை புற நகர் பகுதிகளில் உள்ள 4 வீடுகள் ஒரே நாளில் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை(20) பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.
  • இதற்கமைய குறித்த திருடப்பட்ட வீடுகளில் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை திருடர்கள் தமது கைவரிசையை காட்டியமையை அவதானித்தனர்.
  • மேலும் தொடர் விசாரணைகளை துரிதப்படுத்திய நீலாவணை பொலிஸாருக்கு போதைப்பொருள் பாவனை தொடர்பாக பொலிஸாரின் ஒற்றர் மூலம் தொலைபேசி வாயிலான தகவல் கிடைக்கப் பெற்றது.
எழுத்து அளவு:

காலமாக ஈடுபட்ட  இரு சந்தேக நபர்களை  5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை புற நகர் பகுதிகளில் உள்ள 4 வீடுகள் ஒரே நாளில் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை(20)   பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடுகள்  வழங்கப்பட்டிருந்தன.

குறித்த முறைப்பாட்டுக்கமைய பெரிய நீலாவணை பொலிஸார் உடனடியாக  விசாரணைகளை ஆரம்பித்து திருட்டு இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிரீவி கமெராக்களையும்  கண்காணித்தனர்.

இதற்கமைய குறித்த திருடப்பட்ட வீடுகளில் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை திருடர்கள் தமது கைவரிசையை காட்டியமையை அவதானித்தனர்.

மேலும் தொடர்  விசாரணைகளை துரிதப்படுத்திய நீலாவணை பொலிஸாருக்கு   போதைப்பொருள் பாவனை தொடர்பாக  பொலிஸாரின் ஒற்றர் மூலம்  தொலைபேசி வாயிலான  தகவல் கிடைக்கப் பெற்றது.

இதனையடுத்து பொலிஸ் குழு  யதிருடர்கள் பதுங்கி இருந்த வீட்டை முற்றுகையிட்டு அங்கிருந்த 2 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

இதன் போது கடந்த காலங்களில் வீடுகள் உடைத்து திருடப்பட்ட பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம், போதைப்பொருட்கள்  என்பன கைப்பற்றப்பட்டன.

அத்துடன் கைதான  மருதமுனை நூராணியா வீதியை சேர்ந்த அப்துல் காதர் முகைதீன் முஹமட் ரொகான (30)   மற்றும் மருதமுனை சம் சம் வீதியை சேர்ந்த முகமட் மஜினூன் முகமட் கிகான் (32)  ஆகிய இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டதுடன்  கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (21) ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இரு சந்தேக நபர்களை  எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புகாலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த இரண்டு  சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி  உருக்கிய கல்முனை நகைக்கடை உரிமையாளர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன்
அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மருதமுனையில் கைதான இருவருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு! | Tamil Leader | We Lead the Nation