Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பேருவளை முதலாளிக்கு சிறைத்தண்டனை!

T

The Leader Desk

ஜூலை 23, 2024 • 4:36 AM

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பேருவளை முதலாளிக்கு சிறைத்தண்டனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேருவளை, சமட் மாவத்தையைச் சேர்ந்த பிரதிவாதிக்கே நீதிமன்றினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • பல வருடங்களாக வழக்கை விசாரிக்கப்பட்ட நிலையில் பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
  • இலஞ்சம் வழங்குவது சட்டவிரோதமான செயல் என சுட்டிக்காட்டிய அதேநேரம் அவரைக் கைது செய்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்ததன் பின்னர் சட்டமா அதிபர் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
எழுத்து அளவு:

நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக விதானகேவுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற பிரதிவாதிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபந்தகே உத்தரவிட்டுள்ளார். 

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பேருவளை, சமட் மாவத்தையைச் சேர்ந்த பிரதிவாதிக்கே நீதிமன்றினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
2018 ஆம் ஆண்டு, முறைப்பாட்டாளர் பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது, ​​பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்ததுடன மாடுகள் ஏற்றப்பட்ட லொறி ஒன்றையும் கைப்பற்றி களுத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்
 
பேருவளை பொறுப்பதிகாரியைச் சந்தித்த குற்றவாளி, பொலிஸாரின் பிடியில் உள்ள மாட்டு லொறியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தபோது பொலிஸ் பொறுப்பதிகாரி அதற்கு மறுத்துள்ளார்.
 
தனது முயற்சியைக் கைவிடாத குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தம்மிடம் இருந்த உறையொன்றை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கொடுத்து, மாட்டுகளையும் லொறியையும் விடுவிக்குமாறு கூறியதாகவும் அப்போது பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு உறையிலிருந்த  பணத்தை எண்ணியபோது 25,000 ரூபா அதில் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இலஞ்சம் வழங்குவது சட்டவிரோதமான செயல் என சுட்டிக்காட்டிய  அதேநேரம் அவரைக் கைது செய்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்ததன் பின்னர் சட்டமா அதிபர் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
 
பல வருடங்களாக வழக்கை விசாரிக்கப்பட்ட நிலையில் பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
 
அவருக்கு எதிராக இலஞ்சம் பெற முயற்சித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...