Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தம்மிக்க நிரோஷன் கொலை: அம்பலமான பல தகவல்கள்!

T

The Leader Desk

ஜூலை 23, 2024 • 4:29 AM

தம்மிக்க நிரோஷன் கொலை: அம்பலமான பல தகவல்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தம்மிக நிரோஷனின் கொலையில் தன்னுடன் மூன்று பேர் ஈடுபட்டதாகவும், தான் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோது, ​​மற்றொரு நபர் தம்மிகவை கத்தியால் குத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
  • தம்மிக்கவின் கொலைக்குப் பின்னர், சந்தேக நபர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் காட்சியைப் பின்தொடர்ந்த அதிகாரிகள், தம்மிகவைக் கொல்லப் பயன்படுத்திய கையுறைகளை அப்பகுதியில் உள்ள கால்வாயில் வீசுவதைக் காட்டும் படச்சட்டத்தை அவதானித்த பின்னர் அவரை அடையாளம் கண்டனர்.
  • சிசிரீவி காட்சிகள் மூலம் முழுமையான விசாரணைக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வர்.
எழுத்து அளவு:

கிரிக்கெட் அணியின் கெப்டனாக இருந்த தம்மிக்க நிரோஷனை சுட்டுக் கொன்ற நபரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு முறை தம்மிகவை கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ள அவர் தனது இலக்கை மூன்றாவது முறையாக அடைய முடிந்ததாகவும் கூறியுள்ளார்

மேலும், விசாரணையின்போது, ​​தம்மிக்க நிரோஷனை  இத்தாலி மற்றும் டுபாயில் இருவரின் திட்டத்துக்கமையவே கொலை செய்ததாகவும் இத்தாலியில் வசிப்பவர்களே  துப்பாக்கியை வழங்கியதாகவும் துப்பாக்கிச்  சூடு நடத்திய நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தம்மிக நிரோஷனின் கொலையில் தன்னுடன் மூன்று பேர் ஈடுபட்டதாகவும், தான் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோது, ​​மற்றொரு நபர் தம்மிகவை கத்தியால் குத்தியதாகவும் அவர்  தெரிவித்தார்.

சிசிரீவி காட்சிகள் மூலம் முழுமையான விசாரணைக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வர்.

தம்மிக்கவின் கொலைக்குப் பின்னர், சந்தேக நபர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் காட்சியைப் பின்தொடர்ந்த அதிகாரிகள், தம்மிகவைக் கொல்லப் பயன்படுத்திய கையுறைகளை அப்பகுதியில் உள்ள கால்வாயில் வீசுவதைக் காட்டும் படச்சட்டத்தை அவதானித்த பின்னர் அவரை அடையாளம் கண்டனர்.

இவரைத் தவிர, தம்மிக்கவின் கொலைக்கு மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவரிடமிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...