Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு: சாய்ந்தமருதுவில் சம்பவம்!

T

The Leader Desk

ஜூலை 21, 2024 • 6:39 AM

மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு: சாய்ந்தமருதுவில் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாமனாரின் உடல் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09 இன்று(21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபரான 32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முகமட் அன்சார் தலைமறைவாகியுள்ளார்.
  • இந்த விடயத்தில் தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • மேலும் இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி மரணடைந்த 62 வயதுடைய மீராசாயிப் சின்னராசா என்பவரின் உடல் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
மாமனாரின் உடல் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09  இன்று(21)  அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபரான 32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முகமட் அன்சார்  தலைமறைவாகியுள்ளார்.
 
தனது மகளை விவாகரத்துச் செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிவடைந்துள்ளதாக அடிப்படை விசாரணையில்  தெரிய வந்துள்ளது.
 
IMG 20240721 120316 800 x 533 pixel
 
இந்த விடயத்தில் தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு  கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும்  சம்பவ இடத்துக்குச் சென்று  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
மேலும் இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி  மரணடைந்த 62 வயதுடைய மீராசாயிப் சின்னராசா என்பவரின் உடல் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...