Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி!

T

The Leader Desk

ஜூலை 20, 2024 • 4:44 PM

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து இருந்தனர்.
  • ஏனைய சமூகத்தினருக்கு 5000 கொடுப்பணாவு வழங்கிய போதும் பெருந்தோட்ட மக்கள் அரச அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.
  • அவர்கள் வேலைக்கு செல்வதாகவும், அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
  • மேலும் 1700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போது உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
எழுத்து அளவு:

1,700 ரூபா சம்பள நீதிமன்ற தலையீட்டால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை  தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000+ரூபாய் அரசாங்கம் வழங்க வேண்டுமென  இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில்  பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து இருந்தனர். ஏனைய சமூகத்தினருக்கு  5000 கொடுப்பணாவு வழங்கிய போதும் பெருந்தோட்ட மக்கள் அரச அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வேலைக்கு செல்வதாகவும், அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அப்போதைய பிரதமரின் இணைப்பு செயலாளராக இருந்த  செந்தில் தொண்டமான்,இப்பிரச்சினை குறித்து  அப்போதைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று, 5000 வழங்குவதற்கான நியாயமான அரச ஆவணங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து, 

இந்த நிவாரண தொகையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன் பல முறை கலந்துரையாடி   மலையகம் முழுவதும் குறித்த தொகையை இடைக்கால நிவாரணமாக செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 1700 ரூபாய் சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000+ ரூபாய் வழங்க  மாவட்டம் வாரியாக  தொழிலாளர்களின் பட்டியல்,நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை,தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கை என அனைத்து ஆவணங்களை செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய செந்தில் தொண்டமானின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யுமாறு   சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் 1700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போது உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...