Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு: இரு பொலிஸாரும் பிணையில் விடுதலை!

T

The Leader Desk

ஜூலை 20, 2024 • 4:45 AM

இலஞ்சக் குற்றச்சாட்டு: இரு பொலிஸாரும் பிணையில் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸாரும் பிணையில் விடுதலை!
  • சந்தேக நபர்களுக்கு 25,000 ரூபா ரொக்கப் பிணைகள் இரண்டும் தலா பத்து இலட்சம் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளும் வழங்க உத்தரவிட்ட நீதிவான் வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
  • பொலிஸ் பரிசோதகர் லசந்த தர்மரத்ன மற்றும் கான்ஸ்டபிள் ஹசித் டெவின் ஆகியோரையே பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பொலிஸாரும் பிணையில் விடுதலை!

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
 
சந்தேக நபர்களுக்கு 25,000 ரூபா ரொக்கப் பிணைகள் இரண்டும் தலா பத்து இலட்சம் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளும் வழங்க உத்தரவிட்ட நீதிவான் வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
 
பொலிஸ் பரிசோதகர் லசந்த தர்மரத்ன மற்றும் கான்ஸ்டபிள் ஹசித் டெவின் ஆகியோரையே பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சந்தேக நபர்கள் பெற்றுக் கொண்ட பணம் இலஞ்சம் அல்ல எனவும் பணமோசடி வழக்கு ஒன்றில் சாட்சியமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய் கமகே தெரிவித்தார்.
 
இந்த வழக்கு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆரம்பக் கட்ட விசாரணை முடிந்து விட்டதாக நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து பிணை வழங்கி உத்தரவிட்டது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலஞ்சக் குற்றச்சாட்டு: இரு பொலிஸாரும் பிணையில் விடுதலை! | Tamil Leader | We Lead the Nation