Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்தவைக் கொன்ற குத்தகைக் கொலையாளிகளின் இருப்பிடம் அம்பலமானது!

T

The Leader Desk

ஜூலை 19, 2024 • 5:18 PM

கிளப் வசந்தவைக் கொன்ற குத்தகைக் கொலையாளிகளின் இருப்பிடம் அம்பலமானது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுரேந்திர வசந்த பெரேரா துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
  • நீதிமன்ற அனுமதியின் பேரில் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது ஏனைய குழுவினர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

சுரேந்திர வசந்த பெரேரா துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்காலத்தில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
 
இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில்  சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
 
நீதிமன்ற அனுமதியின் பேரில் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது ஏனைய குழுவினர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கிளப் வசந்தவைக் கொல்ல வந்த துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் பாதுகாப்புப் படையில் முன்னர் பணி புரிந்தவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இக்கொலைக்குப் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட பஸ் ஒன்றும் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
அதன் ஊடாக அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உள்ளிட்ட குழுவினர் அத்துரிகிரிய பிரதேசத்தில் 6 மாத காலத்துக்கு வாடகை வீடொன்றையும் பெற்றுள்ளதாகவும், அதற்காக 6 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...