திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவர் மூளைச்சாவு அடைந்தமை தெரிய வந்தது. மகளுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது என விசேட மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டனர். எனது மகளால் இன்னும் பல உயிர்கள் வாழ முடியும் என்பதை அறிந்த நானும் என் மனைவியும் மறுபடி யோசிக்காமல் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உடலின் எந்தப் பாகத்தையும் தானம் செய்ய சம்மதம் தெரிவித்தோம்.'
மூளைச்சாவடைந்த மாணவி கம்பளை ஹிருஷிகா: உடல், உறுப்புகளை தயக்கமின்றி தானம் செய்த பெற்றோர்!
T
The Leader Desk
ஜூலை 19, 2024 • 2:02 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- மகளின் மூளையில் ஒரு நரம்பு வெடித்து விட்டதாக மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
- பின்னர் அவர் மூளைச்சாவு அடைந்தமை தெரிய வந்தது.
எழுத்து அளவு:
இவ்வாறு திடீர் சுகவீனமடைந்து மூளைச்சாவடைந்த மாணவி ஹாசினி ஹிருஷிகா இளங்கோன் (15) என்பவரின் தந்தையான ஐ.எம். இளங்கோன் தெரிவித்தார்.
கம்பளை, வெலிகல்ல கொடதெனியவை வசிப்பிடமாகக் கொண்ட ஹிருஷிகா, கொட்டகலொலுவ ஸ்ரீ ஜினரதன வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்.
உடல் உறுப்புகளை தானம் செய்த ஹிருஷிகா, பாடசாலையில் மாணவர் தலைவராகவும் பாடசாலை சுற்றுச்சூழல் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
எனது மகள் ஹிருஷிகா பாடசாலையில் சுயநினைவை இழந்துள்ளார். அப்போது அருகில் இருந்த மாணவி அவளைக் கீழே விழாமல் பிடித்துள்ளார். பின்னர் கொழும்பு ரிட்ஜ் சிறுவர் வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மகளின் மூளையில் ஒரு நரம்பு வெடித்து விட்டதாக மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
மகளின் மூளை செயலிழந்து விட்டதாகவும் அவரை இப்படியே வைத்திருக்க முடியாதென்றும் டாக்டர் குழுவினர் தெரிவித்தனர்.
மகளின் மரணம் குறித்து எங்கள் இதயத்தில் தாங்க முடியாத வேதனை உள்ளது. எங்கள் குடும்பத்தில் மூத்த மகள் இருக்கிறாள். ஹிருஷிகா எனது இரண்டாவது மகள். நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஹிருஷிகா அடக்கம் செய்யப்பட்டார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மூளைச்சாவுற்ற உறுப்பு மீட்புப் பிரிவினால் ஹிருஷிகாவின் உறுப்புகள் எடுக்கப்பட்டதால் மேலும் பல உயிர்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாக இளங்கோன் மேலும் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

