Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மாகந்துர மதூஷிடம் கிளப் வசந்த பணம் பெற்றமைக்கான தகவல்கள் விசாரணைகளில் வெளியாகவில்லையாம்!

T

The Leader Desk

ஜூலை 19, 2024 • 1:53 AM

மாகந்துர மதூஷிடம்  கிளப் வசந்த பணம் பெற்றமைக்கான தகவல்கள் விசாரணைகளில்  வெளியாகவில்லையாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட கிளப் வசந்த நாடு முழுவதும் கடனாளியாக இருந்தவர் என்பது தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
  • பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • மாகந்துர மதூஷிடமிருந்து பெருந்தொகை பணம் கடனாகப் பெற்றதாகவும் இந்நிலையில் மதூஷை கைது செய்ய கிளப் வசந்தா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் பணம் பெற்றதாகவோ அல்லது தகவல் வழங்கியதாகவோ தெரிய வரவில்லை.
எழுத்து அளவு:

இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட கிளப் வசந்த  நாடு முழுவதும் கடனாளியாக இருந்தவர் என்பது தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மாகந்துர மதூஷிடமிருந்து பெருந்தொகை பணம் கடனாகப் பெற்றதாகவும்  இந்நிலையில் மதூஷை கைது செய்ய கிளப் வசந்தா பொலிஸாருக்குத்  தகவல் வழங்கியதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் பணம் பெற்றதாகவோ அல்லது தகவல் வழங்கியதாகவோ தெரிய வரவில்லை.
 
உயிரிழந்த கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை வாழும் காணொளிகள் பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்ட போதிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
மேலும், கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: நாட்டில் நடக்கும் எந்தவொரு கொலைச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்தால் அந்த நபர்களுக்கு எதிராக எந்தத் தரமும் பார்க்காமல் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...