Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த படுகொலை: குத்தகைக் கொலையாளிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்!

T

The Leader Desk

ஜூலை 18, 2024 • 4:30 AM

கிளப் வசந்த படுகொலை: குத்தகைக் கொலையாளிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவரைச் சுட்டுக் கொன்று பாடகர் கே.
  • எனவே, தாக்குதல் நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
  • ஆனால், இவர்கள் இருவரும் தப்பிச் சென்றதற்கான சரியான தகவலும் ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
  • கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
எழுத்து அளவு:

நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவரைச்  சுட்டுக் கொன்று பாடகர் கே. சுஜீவ உள்ளிட்ட நால்வரை படுகாயமடையச் செய்த பாதாள உலக குத்தகைக் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை ஈடுபட்டுள்ள குழுக்கள் சந்தேகிக்கின்றன.

அவர்கள் தென் கரையோரம் ஊடாக மீனவப் படகில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த வாடகைக் கொலையாளிகளை கைது செய்ய பல இடங்களில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்ட போதும் அவர்கள் தொடர்பில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
 
இதுபற்றி விசாரணையில் ஈடுபட்ட சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 
இவ்வாறு திட்டமிட்டு மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்படும்போது, ​​அதில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராகின்றனர்.
 
எனவே, தாக்குதல் நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் தப்பிச் சென்றதற்கான சரியான தகவலும் ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
 
தாக்குதல் நடத்திய இரு கொலையாளிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும்  அவர்கள் தாக்குதலை நடத்திய விதம் அதனை உறுதிப்படுத்துவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவிய 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
ஆனால், கொலையாளிகள் இருவரையோ திட்டமிட்ட நபர்களையோ இதுவரை கைது செய்ய முடியவில்லை.
 
காஞ்சிபான இம்ரான், லொகு பெட்டி, உனகுருவே சாந்த மற்றும் ரொட்டம்பே அமில உள்ளிட்ட பாதாள உலகக் குழுவொன்று இந்தத் தாக்குதலை வழி நடத்தியதாக பாதுகாப்புப் படையினர் நம்புகின்றனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...