Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அம்பலாங்கொடையில் கிரிக்கெற் வீரரை சுட்டுக் கொன்றவர்கள் நடந்தே தப்பிச் சென்றனராம்!

T

The Leader Desk

ஜூலை 18, 2024 • 3:59 AM

அம்பலாங்கொடையில் கிரிக்கெற் வீரரை சுட்டுக் கொன்றவர்கள் நடந்தே தப்பிச் சென்றனராம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துப்பாக்கியால் சுடப்பட்டதில் அது அவரது தலையை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
  • ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடிய அவர், அதன் பின்னர் மீண்டும் வெளிநாடு செல்லும் நோக்கில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடிய 'ஜோன்டி' எனப்படும் தம்மிக்க நிரோஷன நேற்று  முன்தினம் (16) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்

அம்பலாங்கொடை போகஹவத்தை கந்த மாவத்தையில் வசிக்கும் தம்மிக்க நிரோஷன என்பவரே இரவு 9.30 மணியளவில் அவரது வீட்டுக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
 
துப்பாக்கியால் சுடப்பட்டதில் அது அவரது தலையை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
வீட்டுக்கு அருகில் உள்ள காணி ஒன்றிலிருந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் நடந்தே தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
 
அப்போது, ​​அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உயிரிழந்தவர் வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
41 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
 
2002ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடிய அவர், அதன் பின்னர் மீண்டும் வெளிநாடு செல்லும் நோக்கில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
நபர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 
இதேவேளை, இதற்கு முன்னரும் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...