Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

எண்ணிக்கையில் குறைந்தாலும் தூரத்தில் மஹிந்தவை மிஞ்சிய மைத்திரி!

T

The Leader Desk

ஜூலை 17, 2024 • 8:32 AM

எண்ணிக்கையில் குறைந்தாலும் தூரத்தில் மஹிந்தவை மிஞ்சிய மைத்திரி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ராஜபக்க்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் விமானப்படையின் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி 978 உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
  • முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது ஐந்து வருட காலப்பகுதியில் 557 விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செய்யப்பட்ட முறையீட்டின்படி, 04.01.2024 அன்று மேல்முறையீட்டு எண்.
  • RTIC/Appeal/398/2023 இன் கீழ் தகவல் அறியும் ஆணைக்குழு விமானப்படைத் தலைமையகத்துக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
எழுத்து அளவு:

ராஜபக்க்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் விமானப்படையின்   ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி 978 உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது ஐந்து வருட காலப்பகுதியில் 557 விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமையின் கீழ் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

'டெய்லி மிரர்' நாளிதழ் இது தொடர்பான தகவல்களை முதலில் விமானப்படைத் தலைமையகத்திடம் கோரிய போதிலும் விமானப்படை தகவல் வழங்கத் தவறியுள்ளது.

பின்னர், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் அவர்களது சகோதர பத்திரிகையான 'அத' செய்த முறையீட்டுக்குப பதிலளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செய்யப்பட்ட முறையீட்டின்படி, 04.01.2024 அன்று மேல்முறையீட்டு எண். RTIC/Appeal/398/2023 இன் கீழ் தகவல் அறியும் ஆணைக்குழு விமானப்படைத் தலைமையகத்துக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து ஜூலை 11, 2024 அன்று தகவல் வழங்கப்பட்டதாலும் கோரப்பட்ட தகவலின் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் தனது நிர்வாகத்தின் ஐந்து வருட காலப்பகுதியில் 557  தடவைகள் விமான சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உள்நாட்டு விமானங்கள் மூலம் அவர் மொத்தம் 131,277.17 கிமீ தூரம் பயணித்துள்ளார்.

ஒப்பீட்டளவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிர்வாகத்தின் போது விமானப்படை ஹெலிகொப்டர்களை அதிகளவில் பயன்படுத்தினார், இது ஆண்டுக்கு சராசரியாக 111 விமானங்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது, இது ராஜபக்க்ஷவின் ஆண்டு சராசரியான 88 ஐ விஞ்சியது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...