ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 40 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் துபாயிலும் பிரான்ஸில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளப் வசந்தவின் கொலைக்குப் பின்னர் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் முரண்பாடாம்!
T
The Leader Desk
ஜூலை 17, 2024 • 7:23 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 40 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் துபாயிலும் பிரான்ஸில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறும் 43 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
- அந்த 43 பிரிவுகளும் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ளதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
- நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதாள உலக செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
இவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறும் 43 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்த 43 பிரிவுகளும் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ளதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதாள உலக செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சுமார் 1091 பாதாள உலக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கஞ்சிபான இம்ரான் போன்று வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ள பாதாள உலக குழுவொன்று செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை, கிளப் வசந்த என்ற கோடீஸ்வர வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையின் பின்னர், சிறையில் உள்ள பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

