Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மட்டு. பல்கலையில் பட்டம் பெற்று வெளியேறிய யுவதி உயிரிழந்தது எவ்வாறு? மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்!

T

The Leader Desk

ஜூலை 17, 2024 • 3:52 AM

மட்டு. பல்கலையில் பட்டம் பெற்று வெளியேறிய யுவதி  உயிரிழந்தது எவ்வாறு? மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பட்டதாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உடதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
  • அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.
  • ஹுன்னஸ்கிரிய ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த பிலிப் நக்மா என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது. தெல்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எழுத்து அளவு:

சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பட்டதாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உடதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுன்னஸ்கிரிய ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த பிலிப் நக்மா என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது. 
 
தெல்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
உடதும்பர மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் பி.கே. அபேரத்னவினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது உயிரிழந்த  யுவதியின் தந்தை சாட்சியமளிக்கையில்,
 
“எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார். அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெததும்பர பிரதேச செயலகத்துக்கு நியமனம் செய்யப்பட்டார் என தெரிவித்தார்.
 
தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.எம்.ஆர். அனுருத்த ரத்நாயக்க மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன் மூளையில் கட்டி வெடித்து இரத்தம் கசிவதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தார். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...