Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது? -மனோ கணேசன்

T

The Leader Desk

ஜூலை 16, 2024 • 8:09 AM

தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது? -மனோ கணேசன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன்.
  • பல காலமாகவே பொருந்தும். 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது, இலங்கை ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த படியாக அதிகம் அந்நிய செலாவணி, அதுவும் ஸ்டேர்லிங் பவுண்ட்சில் திறைசேரி இருப்பை கொண்ட நாடாக இருந்தது.
  • தமது வாக்காள மக்களுக்கு கையை வீசி, இலவசமாக அள்ளி, அள்ளி வழங்கி வாக்குகளை பெற்றார்கள்.
எழுத்து அளவு:

ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால், அந்த தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக கொழும்பு அவிசாவளை முதல் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா வரை தேயிலை மலைகளில் நாள் முழுக்க பாடு படும் எங்க குல பெண்களுக்கு நல்ல செய்தி எப்போது வர போகிறது ? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். 

ஈரான் நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மும்மடங்கு அதிகரித்தமையால், அந்நாட்டிடம் இருந்து  இலங்கை கடனுக்கு வாங்கிய பெட்ரோலுக்காக செலுத்த வேண்டிய தொகையில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமை குறித்து மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது;   

இது ஈரானுக்கு மட்டும் அல்ல. உலகின் பல நாடுகளிடம் இருந்து நாம் வாங்கிய கடன்களுக்கும் பொருந்தும். பல காலமாகவே பொருந்தும். 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது, இலங்கை ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த படியாக அதிகம் அந்நிய செலாவணி, அதுவும் ஸ்டேர்லிங் பவுண்ட்சில் திறைசேரி இருப்பை கொண்ட நாடாக இருந்தது. இது பற்றி ஜனாதிபதி மிக பெருமையாக நாடாளுமன்றத்தில் வந்து சொன்னார்.

அந்த ஸ்டேர்லிங் பவுண்ட்சில் திறைசேரி இருப்பு முழுக்க முழுக்க எங்கள் உழைப்பால் பெற பட்டது. இது உண்மை. இது எப்படி? அன்று இலங்கையில் பெருந்தோட்ட தொழிற்துறையை தவிர, பெயருக்கு கூட வேறு ஏற்றுமதி தொழிற்துறைகள் இருக்கவில்லை. ஆகவே அன்று முதல் இன்றுவரை கொழும்பு அவிசாவளை தொடக்கம் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா மலைகளில் நாள் முழுக்க எங்கள் பெண்கள்தான்  பாடுபடுகிறார்கள்.

1948ம் முதல் நமது மக்களின் உழைப்பை கொண்டு பெற்ற அந்நிய செலாவணி இருப்பை வைத்து தான், மாறி மாறி வந்த இலங்கை அரசு தலைவர்கள் தாராளமாக ஆட்டம் போட்டார்கள். தமது வாக்காள மக்களுக்கு கையை வீசி, இலவசமாக அள்ளி, அள்ளி வழங்கி வாக்குகளை பெற்றார்கள். அந்த அரசுகளில் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்த பிற்போக்கு பேர்வழிகளும், நமது மக்களை விற்று, சாப்பிட்டு, ஆட்டம் போட்டார்கள்.

இனியாவது மலையக பிற்போக்கு அரசியல்வாதிகள், கோமாளி கூத்துகளையும், வாய் சவடால்களை நிறுத்தி விட்டு, இலங்கை சரித்திரத்தை, பொருளாதார வரலாறுகளை கற்றறிந்து, எமது மக்களின் உரிமைகளுக்கு குரல் எழுப்ப வேண்டும். இந்நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி எவருடனும் கரம் கோர்த்து  செயல் பட தயார்.

இன்று நாம் முற்போக்கு கூட்டணியினராக அரசுக்கு எடுத்து உரைக்கிறோம். இனியும் எங்கள் மக்களை ஏய்த்து பிழைக்க முடியாது. எங்கள் உழைப்பால் வரும் வாழ்வு உங்களுக்கு மட்டும்? சாவு மட்டும் எங்களுக்கா? நான் ஒரு இலங்கையன்,  இதனால், நான் எப்போதும் பெருமை அடைகிறேன். இது பல வருடங்களாக நான் உரக்க கூறி வரும் எனது கொள்கை. ஆனால், எனது மக்களை அடகு வைத்து, அதன் மூலம் எனக்கு நாட்டு பற்று வேண்டாம் என்பதும் எனது கொள்கை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...