Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பிச்சை பாத்திரம் ஏந்திய சமூகமாக நாம் இருக்க முடியாது! - ஹரீஸ் எம்பி

T

The Leader Desk

ஜூலை 13, 2024 • 12:20 PM

பிச்சை பாத்திரம் ஏந்திய சமூகமாக நாம் இருக்க முடியாது! - ஹரீஸ் எம்பி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் பலமாக இருக்கும்போது ஆறு பேர்ச் காணி உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும், இயக்கமாகவும் நாங்கள் இருக்க முடியாது.
  • டி- 100 திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள் நாவிதன்வெளி அமீரலி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  • தமிழ்- முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இனத்துவ சமநிலை பேணப்பட வேண்டும்.
எழுத்து அளவு:

தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் பலமாக இருக்கும்போது ஆறு பேர்ச் காணி உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும், இயக்கமாகவும் நாங்கள் இருக்க முடியாது.

தமிழ்- முஸ்லிம்  மக்கள் இணைந்து வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இனத்துவ சமநிலை பேணப்பட வேண்டும். தமிழ் சகோதரர்கள் பிரதேச செயலாளர்களாக இருந்தால் முஸ்லிம் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும்.

அதுபோன்று முஸ்லிம் சகோதரர் ஒருவர் பிரதேச செயலாளராக இருந்தால் தமிழ் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும். இன்னும் கதைத்து கதைத்து காலத்தை கழிக்க முடியாது.

உடனடியாக செயலில் இறங்க வேண்டிய நேரத்தில் உள்ளோம். மக்களது உரிமை சார்ந்த விடயங்களில் நாங்கள் எப்போதும் கரிசனையுடனையே உள்ளோம் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

டி- 100 திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள் நாவிதன்வெளி அமீரலி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

எங்கள் மண்ணின் வளங்களை பயன்படுத்தி எத்தனை தொழிற்பேட்டைகளை உருவாக்கப் போகிறீர்கள் என ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேட்போம்.

அவர்களை ஆதரிக்க முன்னர் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகள் எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கப்போகிறீர்கள் என்று கேட்போம். 

எங்களின் மூதாதையர்கள், தாய் தந்தைகள் தந்த நிலங்களுக்கு உரிமை கேட்க பிரதேச செயலகங்களில் பிச்சை பாத்திரம் சுமக்கும் சமூகமாக நாம் இருக்க முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒருவர் அமைச்சராகவும், நால்வர் பிரதி அமைச்சராகவும் உருவாகும் இயக்கமல்ல.

எங்களின் பலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியைத் தீர்மானிக்கும் பலமாக இருக்கும்போது ஆறு பேர்ச் நிலத்தின் உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும் இயக்கமாகவும் நாங்கள் இருக்க முடியாது.

இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளோ, முஸ்லிம் சமூகத்தினரோ தளர்ந்து விடக்கூடாது.

இன்னும் நமது மண்ணில் நாம் உரிமைகளை  வென்றவர்களாக கௌரவத்துடன் வாழ வேண்டிய கட்டத்துக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிச்சை பாத்திரம் ஏந்திய சமூகமாக நாம் இருக்க முடியாது! - ஹரீஸ் எம்பி | Tamil Leader | We Lead the Nation