Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறை குறித்த விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கோரப்பட்டது

T

The Leader Desk

ஜூலை 12, 2024 • 4:48 PM

முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறை குறித்த விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கோரப்பட்டது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பகிரங்கப்படுத்தப்படாமல் இருக்கும், 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • ஆம் ஆண்டு திகன சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது.
  • ““சபாநாயகரே உங்களுக்குத் தெரியும், சுயாதீன ஆணைக்குழுக்கள் அணைத்தும், உங்களுக்கு கீழ் அவதானிக்கப்படும் ஆணைக்குழுக்கள் காணப்படுகின்றன.
எழுத்து அளவு:

பகிரங்கப்படுத்தப்படாமல் இருக்கும், 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'திகன கலவரம் இடம்பெற்று ஆறு வருடங்கள்: நீதி எங்கே?' என்ற ஆவணப்படத்தில் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என முன்வைக்கப்பட்ட விடயத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் அரசியல் அமைப்பு சபையின் தலைவரான சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.
digana 1
 
““சபாநாயகரே உங்களுக்குத் தெரியும், சுயாதீன ஆணைக்குழுக்கள் அணைத்தும், உங்களுக்கு கீழ் அவதானிக்கப்படும் ஆணைக்குழுக்கள் காணப்படுகின்றன. அதற்கு நீங்கள் அரசியல் அமைப்புச் சபையின் தலைவர் என்ற வகையில் அதற்கான அதிகாரிகளும் அரசியல் அமைப்புச் சபையின் ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு திகன சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது. இன்றோடு ஆறு வருடங்கள் ஆகின்றன. அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால்தான், அதுபற்றி ஆராய்ந்து அந்த அறிக்கையை கிடைக்கப்பெறச் செய்யுமாறு உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.”
 
image b92cb3554a
 
விசாரணைக்கு தலைமை தாங்கிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி கலாநிதி தீபிகா உடகம மற்றும் தற்போதைய ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான கலாநிதி கெஹான் குணதிலக ஆகியோர் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
 

இந்த ஆண்டு அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் கலாநிதி கெஹான் குணதிலக்க பிபிசியிடம் தெரிவித்திருந்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...