Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பிங்கிரிய ஏற்றுமதி வலயம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்! ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு

T

The Leader Desk

ஜூலை 12, 2024 • 2:42 PM

பிங்கிரிய ஏற்றுமதி வலயம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்! ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
  • அத்துடன் பிரதேசத்தில் புதிதாக ஒரு பாரிய ஆடைத்தொழிற்சாலையும் இன்று ஜனாதிபதி மற்றும் ஆளுனர் ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டன.
  • இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.
எழுத்து அளவு:

பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்  கலந்து கொண்டார்.

வடமேல் மாகாணத்தை சகல வளங்களும் பொருந்திய, பொருளாதார மேம்பாடு கொண்ட மாகாணமாக மாற்றியமைக்கும் ஆளுனர் நஸீர் அஹமதின் அயராத முயற்சிகளுக்கான ஓர் அங்கீகாரமாக இந்த ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேசத்தில் புதிதாக ஒரு பாரிய ஆடைத்தொழிற்சாலையும் இன்று ஜனாதிபதி மற்றும்  ஆளுனர் ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து  வைக்கப்பட்டன.

IMG 20240712 200912 800 x 533 pixel

பிங்கிரிய ஏற்றுமதி வலய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் முதலீட்டுச் சபை மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது வடமேல் மாகாணத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கான செயற்திட்டங்கள் குறித்து ஆளுனர் நஸீர் அஹமட் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் முதலீட்டு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் இலங்கை முதலீட்டுச்சபையின் அதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...