Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்! - பொலிஸ் மா அதிபர்

T

The Leader Desk

ஜூலை 12, 2024 • 12:42 PM

பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்! - பொலிஸ் மா அதிபர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்கொள்ளப்பட்டுள்ள எந்த நடவடிக்கைகளையும் திரும்பப் பெற பொலிஸார் தயாராக இல்லை என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
  • புத்தளம் வண்ணாத்தவில்லுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய எரியூட்டியின் மூலம் 881 கிலோ 355 கிராம் கொக்கேய்னை அழிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • முறையான திட்டத்தின் பிரகாரம் நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை அடக்குதல் என்பன தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசபந்து தென்னகோன் வலியுறுத்தினார்.
  • இதுவரை 900 பாதாள உலக சந்தேக நபர்களில் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

மேற்கொள்ளப்பட்டுள்ள எந்த நடவடிக்கைகளையும் திரும்பப் பெற பொலிஸார் தயாராக இல்லை என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் வண்ணாத்தவில்லுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய எரியூட்டியின் மூலம் 881  கிலோ 355 கிராம் கொக்கேய்னை அழிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கொல்லப் போவதாக சமூக வலைத்தளங்களில் பெயர் பட்டியலை வெளியிட்டு அச்சுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்தத்தின்போது பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து அஞ்சாமல் உயிர்த் தியாகம் செய்தது போன்று போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதற்காக தமது உயிரை தியாகம் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளனர்.

முறையான திட்டத்தின் பிரகாரம் நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை அடக்குதல் என்பன தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசபந்து தென்னகோன் வலியுறுத்தினார்.

இதுவரை 900 பாதாள உலக சந்தேக நபர்களில் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் மாதம் முதல் இதுவரை 296 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதாள உலகம் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களும் போதைப்பொருள் கடத்தலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பாரியளவிலான சொத்துக்களே இந்த குற்றவாளிகளுக்கு உணவளிப்பதால் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு மக்களின் ஆதரவு தேவை என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்! - பொலிஸ் மா அதிபர் | Tamil Leader | We Lead the Nation