Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சிங்கபாகு சிங்களப் படத்தை யூரியூப்பில் வெளியிட்டவர் கைது!

T

The Leader Desk

ஜூலை 12, 2024 • 10:28 AM

சிங்கபாகு சிங்களப் படத்தை யூரியூப்பில்  வெளியிட்டவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திஸாநாயக்கவின் சிங்கபாகு திரைப்படத்தை திரையரங்கில் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து யூரியூப் அலைவரிசையில் ஒளிபரப்பியதாகக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
  • சந்தேக நபர் கட்டுகஸ்தோட்டை சிகிரி திரையரங்கில் வைத்து சிங்கபாகு திரைப்படம் முழுவதையும் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாக பொலிஸாரின் 24 மணி நேர விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
  • சந்தேகநபர் (11) கண்டி நீதிவான் நீதிமன்றில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

திஸாநாயக்கவின் சிங்கபாகு திரைப்படத்தை திரையரங்கில் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து யூரியூப் அலைவரிசையில் ஒளிபரப்பியதாகக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கட்டுகஸ்தோட்டை சிகிரி திரையரங்கில் வைத்து சிங்கபாகு திரைப்படம் முழுவதையும் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாக பொலிஸாரின் 24 மணி நேர விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
 
சந்தேகநபர் (11) கண்டி நீதிவான் நீதிமன்றில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
திரையரங்கம் ஒன்றில் கையடக்கத் தொலைபேசி மூலம் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவில் தாம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றதாக சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார்.
 
பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படத்தை மோசடியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது கடும் குற்றம் என்றும், இது உள்ளூர் திரையுலகத்தின் இருப்புக்கு கடும் சவாலாக அமையும் என்றும் அவர் கூறினார்.
 
மிகவும் கடினமான செயல்முறைக்குப் பிறகு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் திரைப்படத் துணுக்குகளை மோசடியாகப் பதிவுசெய்து வெளியிடுவோர் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 
 
இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...